மாயமான சிறுவன் ஒருவன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிறர் துன்பப்படும் செயல்களை செய்யக்கூடாது. தவறுகளை மன்னிக்க பழக வேண்டும் உள்ளிட்ட பண்புகளை சிறுவயது முதலே சொல்லிக் கொடுத்து வளர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் 14 வயது சிறுவனுக்கு நினைத்துப் பார்க்கவே முடியாத கொடூரம் அரங்கேறியுள்ளது.

கதிகலங்க வைத்த கருக்கலைப்புகள்; சென்னை ஸ்கேன் சென்டருக்கு நேர்ந்த கதி இதுதான்!

அவனுடைய பெற்றோர் எவ்வளவு துயரில் வாடியிருப்பர். மனம் எப்படி பதை பதைத்திருக்கும். செங்கல்பட்டை அடுத்த வெண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் புருஷோத்தமன்(14). இவர் அருகிலுள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி முதல் புருஷோத்தமனை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் நேற்று முன்தினம் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதன்பேரில் தீவிர விசாரணை நடைபெற்று வந்தது