சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவலின் படி, அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்தது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.