நாட்டின் மொத்த வெங்காயத் தேவையை மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் கிழக்கு மாவட்டங்கள், மத்திய பிரதேசம் மேற்கு மாவட்டங்கள் ஆகியவையே பெருமளவில் பூர்த்தி செய்கின்றன.
இந்த மாநிலங்களில் கடந்த ஜூலை, செப்டம்பர் மாதங்களில் பெய்த மழை காரணமாக 70 விழுக்காடு வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் வெங்காயம் பற்றாக்குறை ஏற்பட்டது.
வெங்காய ஏற்றுமதிக்கு தடை என்று மத்திய அரசு அறிவித்தும் உள் நாட்டு தேவையை பூர்த்தி செய்யமுடியவில்லை.
மேலும் வெங்காயத்தை இருப்பு வைப்பதிலும் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. மொத்த விற்பனையாளர்கள் வெங்காயத்தை 50 டன் அளவிலும் சில்லறை விற்பனையாளர்கள் 10 டன் வரையிலும் வெங்காயத்தை இருப்பு வைக்கலாம் என்ற நிலை இருந்தது. இதை முறையே 25 மற்றும் 10 டன்னாக குறைத்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்தது.